முட்டை விலை அதிகரிப்பு

தற்போது சந்தையில் முட்டை ஒன்றின் விலை 30 ரூபாயாக உயர்வடைந்துள்ளது.

கால்நடைகளுக்கான உணவுத் தட்டுப்பாடு மற்றும் அதன் விலை இருமடங்காக அதிகரித்தமை போன்ற காரணங்களால் இவ்வாறு விலை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த சில நாட்களில் 840 ரூபாவாக அதிகரித்திருந்த கோழி இறைச்சயின் விலை தற்போது 650 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

Comments are closed.