முதலாம் தவணை கல்வி நாளை முதல் ஆரம்பம்
மேல் மாகாணம் மற்றும் முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில், 2021 கல்வி ஆண்டுக்கான, பாடசாலை கல்வி நடவடிக்கைகள் நாளை (11) ஆரம்பமாகவுள்ளன.
இதற்கமைய, தரம் 02 தொடக்கம் 13 வரையான வகுப்புகள் நாளை ஆரம்பமாகுமென, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு அமைய, பாடசாலை கல்விச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென, கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.