முதல்நாள் பாடசாலை சென்ற சிறுவன் விபத்தில் பலி

பாடசாலைக்குச் சென்ற முதல் நாளே விபத்தில் சிக்கி 6 வயதுடைய சிறுவன் பலியாகியுள்ள சம்பவம், பதுளையில் இன்று(15) பதிவாகியுள்ளது.

பாடசாலைக்குச் சென்றபோது கனரக வாகனத்துடன் மோதுண்டே இச்சிறுவன் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதுளை- அசேலபுர பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பதுளை சரஸ்வதி வித்தியாலயத்துக்கு இவ்வருடம் முதலாம் தரத்துக்கு சேர்க்கப்பட்ட மேற்படி சிறுவன், இன்று முதல் நாளாக பாடசாலைக்குச் சென்றபோதே இந்த அசம்பாவிதம் நேர்ந்துள்ளது.

Comments are closed.