முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி

வங்காளதேச கிரிக்கெட் அணி  தென் ஆப்பிரிக்க மண்ணில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை வங்களாதேசம் அணி ஏற்கனவே கைப்பற்றி இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 367 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக பவுமா 93 ரன்கள் எடுத்தார்.

வங்காள தேச அணி தரப்பில் கலீத் அகமது 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காள தேசம் அணி 298 ரன்கள் மட்டுமே எடுத்தது. 69 ரன்கள் முன்னிலையில் தென் ஆப்பிரிக்கா ஆடியது.

இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்கள் எடுத்தது. இதனால் வங்காளதேச அணிக்கு 274 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இரண்டாது இன்னிங்சை ஆடிய வங்காள தேச அணி கேசவ் மகாராஜ் சுழலில் சிக்கியது.

அந்த அணி 19 ஓவர் மட்டுமே விளையாடி 53 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 220 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. கேசவ் மகாராஜ் 10 ஓவர் பந்து வீசி 32 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆட்டநாயகனாக கேசவ் மகாராஜ் தேர்வு செய்யப்பட்டார்.

Comments are closed.