மும்பையில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு

மராட்டிய மாநிலத்தில் கொரோனா பரவல் பெருமளவில் கட்டுக்குள் வந்துள்ளது. குறிப்பாக, மும்பையில் வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது.

இதற்கிடையில், மும்பையில் 8 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் அக்டோபர் 4 (இன்று) முதல் திறக்கப்படும் என்று மும்பை மாநகராட்சி அறிவித்தது. விருப்பமுள்ள மாணவ/மாணவிகள் பெற்றோரின் அனுமதி பெற்று பள்ளிகளுக்கு வந்து நேரடி வகுப்புகளில் பங்கேற்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், திட்டமிட்டபடி மும்பையில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. பல மாதங்களுக்கு பின்னர் நேரடி வகுப்புகளுக்காக பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதால் 8 முதல் 12-ம் வகுப்பு மாணவ/மாணவிகள் ஆர்வமுடன் வந்த வண்ணம் உள்ளனர்.

Comments are closed.