மும்பை-மத்தியபிரதேச அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

மும்பை-மத்தியபிரதேச அணிகள் மோதும் ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி பெங்களூருவில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.

87-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் மும்பை -மத்தியபிரதேச அணிகள் இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.பெங்கால்-மத்திய பிரதேச அணிகள் இடையிலான அரைஇறுதி ஆட்டம் பெங்களூருவில் கடந்த 14-ந்தேதி தொடங்கியது.இதில் பெங்கால் அணியை வீழ்த்தி மத்தியபிரதேசஅணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது .மற்றோரு அரையிறுதி போட்டியில் உத்தர பிரதேசத்தை வீழ்த்தி மும்பை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது .

மத்தியபிரதேச அணி 1998-99-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.41 முறை சாம்பியனான மும்பை அணி 2016-17-ம் ஆண்டுக்கு பிறகு இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.மும்பை-மத்தியபிரதேச அணிகள் மோதும் ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி பெங்களூருவில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.

Comments are closed.