முல்லைத்தீவில் பாடசாலை மைதானத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புலிகளின் ஆயுதங்கள்

முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி தேசிய பாடசாலையின் மைதானத்திற்குள் விடுதலைப் புலிகளினால் புதைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு ஆட்லறி செல்கள் மீட்கப்பட்டு வருகிறது.

மேலும் பாடசாலை மைதானத்தில் கடந்த 25 ஆம் திகதி மைதான துப்பரவு பணியின் போது வெடிபொருட்கள் இனம் காணப்பட்டுள்ளன.

அத்தோடு அந்த பகுதியில் மோட்டார் குண்டுகள் மேலும் நிலத்தில் புதையுண்டு காணப்பட்டுள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக அவற்றை தோண்டும் நடவடிக்கை இன்று இடம்பெற்றது.

மேலும் முல்லைத்தீவு மாவட்ட படையினர் இன்று வியாழக்கிழமை பொலிசார் படையினர் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கனரக இயந்திரம் கொண்டு தோண்டப்பட்ட போது வெடிக்காத நிலையில் அதிகளவான மோட்டார் குண்டுகள் நூற்றுக்கணக்கில் மீட்கப்பட்டுள்ள

மேலும் இதனை செய்தி சேகரிப்பாதற்காக முள்ளியவளை பொலிஸ் நிலைய அதிகாரியின் அனுமதி பெற சென்ற ஊடகவியலாளர்களுக்கு படையினர் அனுமதிமறுத்துள்ளார்கள் படங்கள் எதுவும் வெளிவரக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார்கள்.

Comments are closed.