முல்லைத்தீவில் மின்னல் தாக்கி விவசாயிகள் மூவர் பலி..!

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு பகுதியில் வயல்வெளியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மூன்று விவசாயிகள் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

தண்ணிமுறிப்பு வயல் வெளியில் குறித்த விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளில்  ஈடுபட்டிருந்த வேளையில் பலத்த மழையுடன் மின்னல் தாக்கமும் ஏற்பட்டிருந்தது.

இதன்போது வயலில் இருந்த மூன்று விவசாயிகள் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தனர்.

சம்பவத்தில் குமுழமுனை மேற்கு, குமுழமுனை மத்தி, வற்றாப்பளை பகுதிகளைச் சேர்ந்த 34, 35 மற்றும் 46 வயதான ஆண்கள் மூவரே மரணித்தனர்.

மழை மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களத்தால் எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில இந்த சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.