முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மாணவர்கள் இருவர் படுகாயம்

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மாணவர்கள் இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை நேர வகுப்பு முடிந்த பின்னர், 13 வயதுடைய மாணவர்கள் மஞ்சள் கடவை ஊடாக வீதியினை கடக்க முற்பட்ட வேளை முல்லைத்தீவில் இருந்து சென்ற முச்சக்கர வண்டி மோதித்தள்ளியதில் விபத்து நிகழ்த்துள்ளது.

இதன்போது சிலாவத்தை பகுதியினை சேர்ந்த மாணவர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த விபத்தில் முச்சக்கர வண்டி புரண்டதில் முச்சக்கர வண்டியின் சாரதியும் காயமடைந்துள்ளார்.

இதன்போது முச்சக்கர வண்டி சாரதி மதுபோதையில் இருந்துள்ளதுடன் முச்சக்கர வண்டியில் இருந்து மதுபான போத்தல் ஒன்றும் பொலீசாரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முச்சக்கர வண்டி சாரதி கைதுசெய்யப்பட்டு முல்லைத்தீவு பொலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Comments are closed.