முல்லைத்தீவு மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (28) பி.ப 2.00மணிக்கு இடம்பெற்றுள்ளது.

இக் கலந்துரையாடலில் மாவட்ட ரீதியில் சிறுவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

குறிப்பாக பாடசாலை இடைவிலகல் மற்றும் மாணவர்களின் பிரச்சினைகள், கடந்த கூட்ட குறிப்பின் முன்னேற்பாடுகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் பிறப்பு சான்றிதழ் இல்லாத பிள்ளைகளுக்கான பிறப்பு சான்றிதழ்களை பெற்றுக் கொடுத்தல், விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்கள், சிறுவர் இல்லங்கள், அறநெறி வகுப்புகள், சுகாதாரம், போசனை, போதைபொருள், சிறுவர் பாதுகாப்பு தொடர்பான அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.

இக் கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர்கள், வலயகல்வி பணிமனை அதிகாரிகள், காவல்துறையினர், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் , சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பட்டோர் கலந்து கொண்டனர்.

Comments are closed.