முஷ்பிகுர் ரஹீம், லிட்டன் தாஸ் அபார சதம்

வங்காளதேசதிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையில் சட்டோகிராமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில் 2-வது டெஸ்ட் மிர்பூரில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கத்திலே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்து இருந்தது.

தொடக்க வீரர்கள் ஹசன் ஜாய் மற்றும் தமீம் இக்பால் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். அந்த அதிர்ச்சியில் இருந்து வங்காளதேச அணி மீள்வதற்குள் அடுத்து வந்த ஹொசைன் சாண்டோ 8 ரன்களிலும், மொமினுல் ஹக் 9 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.

பின்னர் கடந்த போட்டியில் சதம் அடித்த முஷ்பிகுர் ரஹீம் உடன் லிட்டன் தாஸ் இணைந்தார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இலங்கை பந்துவீச்சாளர்கள் திணறினர். சிறப்பாக விளையாடிய இருவரும் சதம் அடித்து அசத்தினர்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேச அணி 5 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்துள்ளது.. லிட்டன் தாஸ் 135 ரன்களிலும் , முஷ்பிகுர் ரஹீம் 115 ரன்கள் எடுத்தும் களத்தில் உள்ளனர். 2-வது நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

Comments are closed.