முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

பள்ளிவாசல்களை மையமாக கொண்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த அனுமதி வழங்க வேண்டாம் என முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் மற்றும் வக்ப் சபையின் பணிப்பாளர் ஏ.பி.அம் அஷ்ரப் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பள்ளிவாசல்களை அடிப்படையாக கொண்டு, இன்றைய தினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்ளை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையிலேயே, அவ்வாறான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டாம் எனவும், அதற்கு அனுமதி வழங்க வேண்டாம் எனவும் ஏ.பி.அம் அஷ்ரப் வலியுறுத்தியுள்ளார்.

Comments are closed.