மூவர் துப்பாக்கிகளுடன் கைது

புத்தளம், தப்போவ சரணாலயத்துக்கு அருகிலுள்ள பாவட்டாமடுவ பிரதேசத்துக்கு வேட்டையாடச் சென்ற மூவர் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர்களை எதிர்வரும் 26ஆம் திகதி நீதிமன்றில்  முன்னிலைப்படுத்தவுள்ளதாக  கருவலகஸ்வௌ வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தப்போவ, பாவட்டாமடுவ பிரதேசங்களைச் சேர்ந்த மூவரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மூவரும் வேட்டையாடும் நோக்கில் துப்பாக்கி, கட்டுத்துவக்கு என்பவற்றை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிள்கள் இரண்டில் பாவட்டாமடுவ பிரதேசத்துக்கு இன்று அதிகாலை பயணித்தனர்.

இது தொடர்பில் வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டத் தகவலையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்போது இரண்டு மோட்டார் சைக்கிள்கள், துப்பாக்கி, கட்டுத்துவக்குடன் தோட்டாக்கள், மின்சாரத் தீப்பந்தங்கள் மூன்று என்பற்றையும் வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

Comments are closed.