மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி

ஹட்டன்- டிக்கோயா நகரசபைக்கு உட்பட்ட பகுதியில் மேலும் ஒருவருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும் இந்நிலையில், அந்தப் பெண்ணின் வீட்டில் மூன்று பெண்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் பொதுசுகாதார பரிசோதகர் ஆர்.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிவரும் 50 வயதுடைய பெண்ணுக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
குறித்தப் பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

மேற்படிப் பெண்ணை தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துச் செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed.