மேலும் 12 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா எமது செய்திச் சேவைக்கு இதனை உறுதிப்படுத்தினார்.

தலைமன்னார் வடக்கு கடற்பரப்பில், நேற்றிரவு 2 படகுகளுடன் குறித்த மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை தலைமன்னாருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை, மீனவர்களின் கைதினை கண்டித்து காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுத்திருந்த இராமேஸ்வரம் மீனவர்கள், நேற்று முதல் மீள மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தனர்.

கைதுசெய்யப்பட்ட 12 பேரும் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் என இந்திய ஊடங்கள் தெரிவித்துள்ளன.

Comments are closed.