மேல் மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் மீள ஆரம்பிக்கப்படும் திகதி அறிவிப்பு!
மேல் மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் மீள ஆரம்பிக்கப்படும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மார்ச் 29ஆம் திகதி முதல் அனைத்து வகுப்புக்களும் வழமைபோல இடம்பெறும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்திருக்கின்றார்.
மேல் மாகாணத்திலுள்ள அரச பாடசாலைகளில் 5,11 மற்றும் 13ஆம் வகுப்புக்கள் கடந்த 15ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
மேலும் , ஏனைய வகுப்புக்களை ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி மீள ஆரம்பிக்க ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.