மேல் மாகாணத்தில் நேற்று 1,000க்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள்

நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 2, 561 பேரில் அதிகமானோர் கம்பஹா மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் மேல் மாகாணத்தில்  1,000க்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, கம்பஹாவில் நேற்றைய தினம் 393 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் 388 பேருக்கும் களுத்துறையில் 382 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாத்தறை மாவட்டத்தில் 250 பேருக்கும் கண்டியில் 200 பேருக்கும் மொனாராகலையில் 116 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

மேலும், வெளிநாடுகளிலிருந்து வந்த 18 பேருக்கும் நேற்று கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Comments are closed.