மேல் மாகாண பாடசாலைகளின் சில பிரிவுகள் இன்று முதல் ஆரம்பம்..!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் கட்டம் கட்டமாக இன்று முதல் ஆரம்பிக்கப்படுகின்றன.

இதற்கமைய தரம் 5,11 மற்றும் 13 இல் பயிலும் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்காக பாடசாலைகள் இன்று ஆரம்பிக்கப்படுகின்றன.

அத்துடன் மேல் மாகாணம் தவிர்ந்த நாட்டிலுள்ள ஏனைய பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் சகல மாணவர்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மேல் மாகாணத்தில் ஏனைய தர மாணவர்களுக்கும் கற்றல் செயற்பாடுகளை விரைவாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கோரியுள்ளார்.

Comments are closed.