மேல் மாகாண பாடசாலைகளில் ஏனைய தரங்களை ஆரம்பிப்பது குறித்து இந்த வார இறுதியில் தீர்மானம்: கல்வியமைச்சு நம்பிக்கை

கட்டங்கட்டமாக மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் ஏனைய தரங்களை ஆரம்பிப்பது குறித்து இந்த வார இறுதியில் தீர்மானம் ஒன்று எட்டப்படும் என கல்வியமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் பிரதேச இணைப்பு குழுவைக் கூட்டி திறக்கக்கூடிய ஏனைய தரங்கள் குறித்து தீர்மானிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் தற்போது கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை மாணவர்களுக்காக மாத்திரம் கற்றல் செயல்பாடுகள் இடம்பெறுகின்றன.

இதன்படி எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னர் மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கக்கூடிய ஏனைய தரங்கள் குறித்து உடனடி தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளுமாறு கல்வியைமச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Comments are closed.