மோசடி வலையில் சிக்கிய இலங்கைப் பெண்

இலங்கையில் உள்ள பெண் ஒருவரிடமிருந்து 129, 000 ரூபா பெற்று மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டவரொருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நுகேகொடை பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்ட நபர், லெசோதோ நாட்டைச் சேர்ந்த 33 வயதான ஒருவரெனக் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண்ணுடன் பேஸ்புக் மூலமாக நட்பினை ஏற்படுத்திய வெளிநாட்டவர், தனக்கு வெளிநாட்டிலிருந்து டொலர் பொதியொன்று கிடைத்துள்ளதாகக்கூறி, அப்பெண்ணிடம் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மோசடி தொடர்பில் கணினிக் குற்ற விசாரணைப் பிரிவினால் சந்தேகநபரான வெளிநாட்டவர் கைதுசெய்யப்பட்டுள்ள அதேவேளை, குறித்த நபர் கல்கிசை பகுதியில் ஆடை வர்த்தகராகச் செயற்பட்டுவந்துளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.