யாழில் அதிபர் – ஆசிரியர்களால் வாகன பேரணி முன்னெடுப்பு!
குறித்த வாகன பேரணி யாழ்ப்பாணம் முற்றவெளியில் இருந்து ஆரம்பித்து யாழ்ப்பாண நகர வீதி வழியாக மாவட்ட செயலகத்தை சென்றடைந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை இன்று இடம்பெறுகின்ற அமைச்சரவை கூட்டத்தில் தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆசிரிய – அதிபர்களின் தொழிற்சங்கங்களுடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து கலந்துரையாடப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன, ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் அறிவித்ததாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
இந்தநிலையில், தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாவிடத்து தற்போது முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.