யாழில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் மூவர் பலி

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் உந்துருளி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

திருநெல்வேலி – இராமலிங்கம் வீதியில் பூங்கனிச்சோலைக்கு அருகில் நேற்றிரவு 10.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

எதிரெதிரே வந்த இரு உந்துருளிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் விபத்து நேர்ந்துள்ளது.

படுகாயங்களுக்குள்ளான மேலும் இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், விபத்து தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேநேரம், உரும்பிராய் பகுதியில் உந்துருளி ஒன்று, மின்கம்பத்துடன் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Comments are closed.