யாழில் இளைஞனுக்கு இராணுவத்தால் நேர்ந்த கதி!!

யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் வீதியால் சென்ற இளைஞர் படையினர் தாக்கிய நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உடுவில் ஆலடியைச் சேர்ந்த சிவலிங்கம் கமில்தாஸ் (வயது-22) என்ற இளைஞரே தாக்குதலுக்குள்ளான நிலையில் இவ்வாறு சிகிச்சைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இராணுவத்தினர் தன்னை வழிமறித்துத் தாக்கியதாக குறித்த இளைஞர் வைத்தியசாலையில் தெரிவித்துள்ளார்.

Comments are closed.