யாழில் மூன்றாவது மலேரியா நோயாளர்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மலேரியா நோயாளி ஒருவர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குருநகர் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், தென்னாபிரிக்காவில் இருந்து அண்மையில் நாடு திரும்பியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த ஒரு மாதத்தில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்ட மூன்றாவது மலேரியா நோயாளர் இவராவார்.

முன்னதாக, மல்லாகம் மற்றும் ஆனைக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவர் மலேரியாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.