யாழ்ப்பாணம்-அாியகுளத்தில் நபரொருவாின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம்-அாியகுளம் வாவியிலிருந்து நபரொருவாின் சடலம் நேற்று (27) கண்டுடெடுக்கப்பட்டுள்ளது.

65 வயது மதிக்கத்தக்க நபரொருவரே இவ்வாறு உயிாிழந்துள்ளதாக காவல் துறையினர் தொிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம்-அாியகுளம் பிரதேசத்தில் வசித்து வந்த நபரொருவர் இரண்டு தினங்களுக்கு முன் காணாமல் போயுள்ளதாக புகார் செய்யப்பட்டிருந்ததாகவும் தற்போது கண்டெடுக்கப்பட்ட சடலம் குறித்த நபருடையதென்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்படுகின்றது.

குறித்த சடலம் பிரேத பாிசோதனைக்காக யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல் துறை தொிவித்துள்ளது.

Comments are closed.