யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர்கள் ஐவர் உட்பட 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர்கள் ஐவர் உட்பட 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள்பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

காத்தான்குடி, கல்முனை மற்றும் மூதூரைச் சேர்ந்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் ஐவருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக இணைந்த விஞ்ஞான சுகாதார கற்கைகள் பீடத்தைச் சேர்ந்த ஐந்து மாணவர்களும் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் கடந்த இரண்டு வாரங்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று பிசிஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கம்பஹாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஒருவருக்கு எழுதுமட்டுவாழ் வீதித் தடையில் நேற்று பெறப்பட்ட மாதிரிகளின் அவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூத்தில் 373 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்திய நிலையில் 6 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Comments are closed.