யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்ப்பு
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி, பல்கலைக்கழக வளாகத்திலிருந்த மின்குமிழ்கள் அணைக்கப்பட்டு ஜே.சி.பி இயந்திரம் கொண்டு இடித்தழிக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பராமரிப்பு பகுதியே இந்த இடித்து அழிக்கும் பணியை இரவோடு இரவாக முன்னெடுத்தது. நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டமும் தொடர்கிறது.