யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பாடசாலைகள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு..!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்களின் கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கும், திரையரங்குகளை இயக்குவதற்கும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு தொடர்ந்து நீடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.