யாழ்ப்பாண பல்கலைக்கழக நினைவிடல் விவகாரம்: மாணவர்கள் இருவர் கைது!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அகற்றுவதற்கான நடவடிக்கை நேற்று இரவு முன்னெடுக்கபட்டது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுக்கூறும் வகையில் நினைவிடமொன்று ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த நினைவு தூபியின் கட்டுமானப் பணிகளை இடைநிறுத்துமாறு முன்னைய அரசாங்க காலப்பகுதியில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எனினும், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றதுடன், நினைவேந்தல் நிகழ்வும் நடத்தப்பட்டன.

இந்த நிலையில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பணிப்புரைக்கு அமைவாக குறித்த நினைவிடத்தை அகற்றும் நடவடிக்கை பல்கலைக்கழக நிர்வாகத்தினால் முன்னெடுக்கபட்டதாக உபவேந்தர் சிவகொழுந்து ஶ்ரீசற்குணராஜா குறிப்பிட்டார்

இந்த விடயம் தொடர்பாக நாம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிவகொழுந்து ஶ்ரீசற்குணராஜாவை தொடர்பு கொண்டு வினவிய போதெ அவர் இதனைக் கூறினார்.,

இந்த நிலையில் இரண்டு மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்துக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Comments are closed.