யாழ் இந்துக் கல்லூரிகளின் புகழ் பூத்த முன்னாள் அதிபருக்கு அன்பேசிவம் விருது!

ஆண்டுதோறும் சிவராத்திரி தினத்தில் சைவ மகா சபையினால் வழங்கப்படும் “அன்பேசிவம்” விருதை யாழ் இந்துக் கல்லூரிகளின் புகழ் பூத்த முன்னாள் அதிபர் தன்னலமற்ற மனிதநேய சேவையாளர் சிவத்திரு. அப்பாத்துரை பஞ்சலிங்கம் ஐயாவிற்கு வழங்க சைவ மகா சபையின் மீயுயர் சபை தீர்மானித்துள்ளது.

இவர் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் வன்னி பெருநிலப்பரப்பில் பல முன்பள்ளிகள், அறநெறிப் பாடசாலைகளை கட்டுவதற்கும் இயக்குவதற்கும் பெரும் பங்கு ஆற்றியுள்ளார்.

அத்துடன் ஒய்வுக்கு பின்னரும் 25 ஆண்டுகளாக பல்வேறு தளங்களில் பல சமய, சமூக அமைப்புக்களின் உயிர்ப்பான தலைவராக, ஆலோசகராக வழிகாட்டியாக இருந்துள்ளார்.

பல ஆயிரக்கணக்கணக்கான மாணவர்களுக்கும் பல நூற்றுக்கணக்கான

உதவி தேவைப்படும் குடும்பங்களிற்கும் மிகச் சிறந்த தொண்டு ஆற்றியுள்ளார்.

இவ் உயர் விருதை மகா சிவராத்திரி நன்னாளில் இறை சிவனின் அருளாசியோடு அறிவிப்பதில் சைவ மகா சபை வழங்கியுள்ளது.

இதேவேளை கடந்த முறை இவ் விருது மகப்பேற்று வைத்திய நிபுணர் சரவணபவாவிற்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.