யாழ்.நகரிலுள்ள முன்னணி ஆரம்ப பாடசாலையின் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று!

யாழ்.நகரிலுள்ள முன்னணி ஆரம்ப பாடசாலையின் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் அவர், நேற்று முன்தினம் வரை பாடசாலைக்கு சென்றுள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைகழக மார்ஷல் ஒருவர் நேற்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

அவரது குடும்பத்தினரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், மனைவி மற்றும் மகள் தொற்றிற்குள்ளானது இன்று தெரிய வந்தது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் அந்த மாணவி, நேற்று முன்தினம் (8) வரை பாடசாலையில் நடந்த வகுப்பிற்கு சென்றிருந்தார். அந்த வகுப்பில் 40 மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள்.

இதையடுத்து, அந்த வகுப்பு மாணவர்கள், ஆசிரியருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

Comments are closed.