யாழ்.பருத்துறை ஆசிரியை உட்பட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.பருத்துறை வட இந்துக்கல்லுாரி நடன ஆசிரியை ஒருவருக்கு கொரோனா உறுதியான நிலையில் அவருடைய குடும்ப உறவினர்கள் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் யாழ்.மிருசுவில் பகுதியை சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவருக்கும், அவருடைய குடும்பத்திற்கும் கடந்தவாரம் கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவர்களுடன் தொடர்பில் இருந்த பருத்துறையை சேர்ந்த ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் இன்றைய தினம் பருத்துறையில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்த சுகாதார பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

Comments are closed.