யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா

வட மாகாணத்தில் நேற்றைய தினம் 55 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 642 பேரின் மாதிரிகள் நேற்று (16) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 9 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 20 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 8 பேரும் வவுனியா மாவட்டத்தில் 11 பேரும் மன்னார் மாவட்டத்தில் 7 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்கள் 6 பேருக்கு கொவிட்-19 தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

Comments are closed.