யுக்ரேனிய சுற்றுலாக்குழுவினரை நாட்டுக்குள் அனுமதித்தது கொரோனா தொற்றின் மூன்றாம் அலையை வரவேற்கும் செயற்பாடாகும் என எதிர்க்கட்சி எச்சரிக்கை!

யுக்ரேனிய சுற்றுலாக்குழுவினரை நாட்டுக்குள் அனுமதித்தமை கொரோனா தொற்றின் மூன்றாம் அலையை வரவேற்கும் செயற்பாடாகும் என எதிர்க்கட்சி விமர்சித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள யுக்ரேனிய பிரஜைகளுக்கு, புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா எனும் சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த தூதுக்குழுவினர் தொடர்பில் நிபுணர்களும் பொதுமக்களும் சந்தேகம் கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சுகாதார தரப்பினர் மேற்கொண்டுள்ள செயற்பாடுகளை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளையே அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல குற்றஞ்சாட்டியுள்ளார்.

Comments are closed.