யேமன் அமைச்சர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் 22 பேர் உயிரிழப்பு!
யேமன் அமைச்சர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
யேமனின் Aden நகரில் அமைந்துள்ள விமான நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மேலும் 60 பேர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த விமான நிலையத்தின் ஊடாக வருகை தந்த யேமன் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் ஆகியோரை இலக்கு வைத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது ஒரு பயங்கரவாத செயலாகும் என யேமன் தகவல்துறை அமைச்சர் விமர்சித்துள்ளார்.
இதேவேளை, இந்த தாக்குதலில் யேமன் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் ஆகியோருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.