ரயில்வே திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!
பிரதான ரயில் மார்க்கங்களில் இன்று முதல் மேலதிக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கரையோர மார்க்கத்தில் 74 ரயில்களும், பிரதான மார்க்கத்தில் 64 ரயில்களும் இயக்கப்படவுள்ளதாக, ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், புத்தளம் மார்க்கத்தில் 26 ரயில்களும், களனிவெலி மார்க்கத்தில் 12 ரயில்களும் வடக்கு மார்க்கத்தில் 6 ரயில்களும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
அனைத்து ரயில் சேவைகளும் பயண அட்டவணையில் இணைக்கப்பட்டுள்ள போதிலும், நீண்டதூரப் பயணங்களுக்கான ரயில்கள் தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.