ரஷியாவில் இருந்து அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு

ரஷியாவில் இருக்கும் அமெரிக்கர்கள் உடனே அந்நாட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.  இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை பயண ஆலோசனை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் ரஷிய படைகள் உக்ரைனில் போரில் ஈடுபட்டு வரும் சூழலில் ரஷியாவில் இருக்கும் அமெரிக்க குடிமக்களை ரஷிய அதிகாரிகள் துண்புறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. இதனால் ரஷியாவுக்கு அமெரிக்கா குடிமக்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம்.

ரஷியாவில் இருக்கும் அமெரிக்கர்கள் தடுத்து நிறுத்தப்படலாம். எனவே அந்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு உடனடியாக வெளியேற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Comments are closed.