“ராகுல் காந்தி மிக எளிமையான மனிதர்” – நேபாள நாட்டு பாடகி பாராட்டு

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேபாள நாட்டில் இரவு விடுதி ஒன்றில் பங்கேற்ற திருமண விருந்து நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ராகுல்காந்தி பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியது. திருமண விருந்தில் பங்கேற்பது தவறா? என்று காங்கிரஸ் பதிலடி கொடுத்தது.

இந்த நிலையில் அந்த இரவு விடுதியில் ராகுல்காந்தி இருந்தபோது இசை நிகழ்ச்சி நடத்தி பாட்டு பாடிய பாடகி சரஸ்வோட்டி பத்ரி என்பவர் ராகுல் காந்தியை புகழ்ந்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “இசை எல்லா தரப்பு மக்களையும் ஒருங்கிணைக்கும் சக்தியைக் கொண்டது. ராகுல் முன்னிலையில் நான் பாடியதை கவுரவமாக நினைக்கிறேன். ராகுல் மிக எளிமையாக சாதாரணமாக இருந்தது என்னை கவர்ந்தது” என்று பதிவிட்டுள்ளார்.

Comments are closed.