ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் தேர்வு

15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டித்தொடர் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சனிக்கிழமையான இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதலாவது ஆட்டத்தில்  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீசி வருகிறது.  இரு அணிகளுக்குமே அடுத்த சுற்று வாய்ப்பை வலுப்படுத்த இது முக்கியமான போட்டி என்பதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் அணி இதுவரை  10 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்திலும் பஞ்சாப் அணி 10 போட்டிகள் விளையாடி 5-ல் வெற்றி,  5-ல் தோல்வி என 10 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது.

Comments are closed.