வடக்கில் டெங்கு காய்ச்சலால் 238 பேர் பாதிப்பு

வட மாகாணத்தில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை டெங்கு காய்ச்சலால் 238 பேர் பீடிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்திலே அதிகளவானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக அந்த மாவட்டத்தில் நேற்று முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை நுளம்பு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Comments are closed.