வரிசையில் நிற்கும் வாகனங்கள்

டீசல் இன்மையால் இன்றைய தினமும் நாட்டின் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்களுடன் சாரதிகள் காத்திருக்கின்றனர்.

சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுமார் 2 கிலோமீற்றர் தூரத்திற்கு சாரதிகள் காத்திருக்கின்றமையை அவதானிக்க கூடியதாக உள்ளது. அத்துடன் பல பேருந்துகளும் அதில் அடங்குகின்றன.

எவ்வாறாயினும் நேற்று கட்டணம் செலுத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட 37,300 மெட்ரிக் டன் டீசல் மற்றும் சுப்பர் டீசல் என்பன முத்துராஜவெல எண்ணெய் களஞ்சியசாலையில் தற்போது களஞ்சியப்படுத்தப்படுகிறது.

இதேவேளை புறக்கோட்டை முதல் ஹோமாகம வரை பயணிக்கும் 138 இலக்க பேருந்துகளில் இன்றைய தினம் 12 பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபடுவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் சுமார் 75 பேருந்துகள் சேவையில் ஈடுபடுகின்ற நிலையில் இன்று அந்த எண்ணிக்கை 12ஆக குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Comments are closed.