வர்த்தக நிலையங்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை

பொதுமக்கள் முறையான சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுகிறார்களா என்பதை பரிசீலிப்பதற்காக மேல் மாகாணத்தில் காவல்துறையினர் விசேட சோதனை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

அதன்படி, பேருந்துகளின் இருக்கைகளுக்கு அதிகமாகப் பயணிகளை ஏற்றிச் செல்வது, முகக்கவசம் அணியாமை, குளிரூட்டப்பட்ட பேருந்துகளுக்குள் நடமாடும் வர்த்தகர்கள் நுழைதல் போன்ற நடவடிக்கைகளை ஆராய்வதற்காக, இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (14) நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணிவரையிலான இரண்டு மணிநேர சோதனை நடவடிக்கையில், 451 காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

318 பேருந்து ஊழியர்கள் மற்றும் 65 குளிரூட்டப்பட்ட பேருந்துகள் மற்றும் 505 வர்த்தக நிலையங்களுக்கு சுகாதார வழிகாட்டுதல்களை மீறுவதற்கு எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 

Comments are closed.