வவுனியாவில் கர்ப்பவதி பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று!

வவுனியாவில் கர்ப்பவதி பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா, பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த குறித்த கர்ப்பவதிப் பெண் தனது வழமையான சிகிச்சைக்காக கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா வைத்தியசாலைக்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு  அன்டிஜன் மருந்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அதன் முடிவுகள் இடிப்படையில் இன்று அதிகாலை குறித்த கர்ப்பவதிப் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த பெண்ணுடன் தொடர்புடையவர்களை தனிமைப் படுத்தும் செயற்பாட்டை சுகாதார பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, கிளிநொச்சி பொறியியல் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் வவுனியா பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவருக்கும் அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.