வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழப்பு

வெல்லவாய, தனமல்வில வீதியின் புதுராகல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீதியின் குறுக்காக மாறுவதற்கு முற்பட்ட மிதிவண்டி ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் புதுராகல பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த விபத்து அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமராவில் இவ்வாறு பதிவாகி இருந்தது.

Comments are closed.