வாகன விற்பனையில் கணிசமான வீழ்ச்சி

அடுத்த வருடம் வாகனங்கள் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட மாட்டாது என நிதியமைச்சர் தெரிவித்துள்ள போதிலும், வாகன விற்பனையில் ஏற்கனவே கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மக்களிடம் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான  ஆற்றல் குறைவடைந்தமையே இதற்குக் காரணம் என சங்கத்தின் தலைவர் எஸ்.கே.கமகே எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

Comments are closed.