விக்கிலீக்ஸ் நிறுவன ஸ்தாபகர் ஜுலியன் அசாஞ்சேவுக்கு இன்று பிணை வழங்கப்படலாம்
விக்கிலீக்ஸ் நிறுவன ஸ்தாபகர் ஜுலியன் அசாஞ்சேவுக்கு இன்று பிணை வழங்கப்படலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பிரித்தானியா – இலண்டன் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள Belmarsh சிறையில், ஜுலியன் அசாஞ்சே தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அவர் மீதான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில், பிணையில் விடுவிக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.