விக்ரம் படம் – புதிய அறிவிப்பை வெளியிட்ட ராஜ்கமல் நிறுவனம்
கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் மே 15ம் தேதி நடைபெற உள்ளது. லோகேஷ் இயக்கத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 3ம் தேதி திரைக்கு வருகிறது.
அனிருத் இசையில் கமல்ஹாசன் எழுதி, பாடியுள்ள பாடல் நாளை வெளியாகும் நிலையில், இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா மே 15ம் தேதி நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது.