விஜய்யுடன் மீண்டும் நடிக்கும் பிரகாஷ்ராஜ்

பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதில் நாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரபல தெலுங்கு டைரக்டர் வம்சி இயக்குகிறார். தமிழ், தெலுங்கில் தயாராகிறது. விஜய் கடந்த சில வருடங்களாக அதிரடி சண்டை படங்களில் நடித்து வந்தார். ஆனால் இது குடும்பம், காதல் கதையம்சத்தில் தயாராவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய்யின் 66-வது படத்தில் பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா ஆகியோரும் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். ஏற்கனவே கில்லி, போக்கிரி உள்ளிட்ட படங்களில் விஜய்க்கு வில்லனாக பிரகாஷ்ராஜ் நடித்து இருந்தார். இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. கடைசியாக 2009-ல் வெளியான வில்லு படத்தில் இணைந்து நடித்து இருந்தனர். தற்போது 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் படத்தில் பிரகாஷ்ராஜ் நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையில் திரைக்கு வருகிறது.

Comments are closed.