விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’

விஜய் ஆண்டனி நடித்து முடித்துள்ள ’மழை பிடிக்காத மனிதன்’ என்ற திரைப்படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது

விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மழை பிடிக்காத மனிதன். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கியுள்ளன

இந்த நிலையில் நடிகர் ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த டைட்டில் போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

விஜய் ஆண்டனியுடன், சரத்குமார், தனஞ்செயன், மேகா ஆகாஷ், உள்பட பலர் நடித்துள்ளனர் இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் இந்த படத்தின் பெரும்பாலான பகுதியை பகுதி படப்பிடிப்பு கோவா டையூ டாமன் ஆகிய பகுதிகளில் நடைபெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Comments are closed.