விலைகுறைப்பை பயணிகளுக்கு வழங்க தயார் – பேருந்து உரிமையாளர்கள்

தனியார் பேருந்துகளுக்கு நாளாந்தம் தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகிக்கப்படுமானால், விலைகுறைப்புக்கு ஏற்ற பயனை பயணிகளுக்கு வழங்க தயாராகவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வலுசக்தி அமைச்சர் மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

தற்போது, இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து டிப்போ ஊடாக தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் விநியோகிக்கப்படுகின்றது.

எனினும், அந்த எரிபொருள் போதுமானதாக இல்லை என இலங்கை பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

Comments are closed.